உக்ரைன் விமான விபத்து; தலா 25,000 டாலர் நிதி

  • In General
  • January 18, 2020
  • 188 Views
உக்ரைன் விமான விபத்து; தலா 25,000 டாலர் நிதி

கனடா:

உக்ரைன் விமானம் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா 25,000 டாலர் நிதியுதவி வழங்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் தெஹ்ரானிலிருந்து கடந்த 8ம் தேதி, உக்ரைன் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய் 176 பேர் பலியாகினர். இதில் கனடா நாட்டை சேர்ந்த 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்த 57 பேரின் குடும்பத்துக்கு 25,000 டாலர் (ரூ.13.5 லட்சம்) நிதியுதவி வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது தேவை இருப்பதால் நிதி உதவியை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்