மத்திய அமைச்சரவை அவசரக்கூட்டம்

மத்திய அமைச்சரவை அவசரக்கூட்டம்

புதுடெல்லி:

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் கால அவகாசம் கேட்டதினால், கவர்னர் மறுப்பு தெரித்தார்.

இதனையடுத்து, தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணியோடு கால அவகாசம் முடிவடையும் நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தினால் உச்சநீதிமன்றம் செல்வதற்கும் சிவசேனா கட்சி சார்பில் ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரதமர் மோடி இன்று மாலை செல்லவுள்ள நிலையில், அதற்கு முன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்