சப்படியில் சீறிப்பாய்ந்த காளைகள்

சப்படியில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஒசூர் அருகே பாரம்பரிய எருதாட்டவிழா : 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசிப்பு

ஒசூர் அருகேயுள்ள பெரிய சப்படி கிராமத்தில் மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்டவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கண்டு ரசித்தனர்.

ஒசூர் அருகேயுள்ள பெரிய சப்படி கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய எருதாட்டவிழா நடைபெற்றது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கிராமத்தின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் மடக்கி பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் கட்டப்பட்டிருந்த அலங்கார தடுக்குகளையும், பரிசுப்பொருட்களையும் வெற்றி பெற்றவர்கள் பறித்து சென்றனர்.

இந்த விழாவில் ஒசூர், சூளகிரி, பேரிகை, பாகலூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக கண்டு ரசித்து சென்றனர். இதில் பார்வையாளராக நின்ற ஏராளமான பொதுமக்களுக்கு காளைகள் முட்டியதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு கிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க சூளகிரி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்