உருவானது ‘புல்புல்’ புயல்

உருவானது ‘புல்புல்’ புயல்

சென்னை:

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மலையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

‘புல்புல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் நோக்கி நகரக்கூடும். ஆகையால் மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்குள் செல்லவேண்டாம் என தெரிவித்தார்.

மேலும், வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் நாளை முதல் 10ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என புவியரசன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்