ஊழியர்களுக்கு சம்பளம்..! பி.எஸ்.என்.எல்., தவிப்பு.!!

ஊழியர்களுக்கு சம்பளம்..! பி.எஸ்.என்.எல்., தவிப்பு.!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்குவது கூட முடியாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு இலவச சேவைகள் வழங்கி வருவதுடன், 4ஜி சேவை வழங்கி வருகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3ஜி சேவையை வழங்க முடியாமல் தவித்து வருகிறது.

மேலும், தனியார் நிறுவனங்களிடம் போட்டி போட முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இதனால் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும், 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜுன் மாதம் சம்பளம் வழங்குவது கூட கேள்விக்குறியாக உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.850 கோடி தேவை எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்