ஜி7 நாடுகளின் உதவியை மறுத்த பிரேசில்

ஜி7 நாடுகளின் உதவியை மறுத்த பிரேசில்

பிரேசில்:

பல நாட்களாக எரிந்து வரும் அமேசான் காடுகளை காப்பாற்ற, ஜி7 நாடுகள் உதவிய நிலையில், பிரேசில் அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களாக பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் பரவி வரும் தீயை அணைப்பதற்காக பிரேசில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் 30 சதவீதம் ஆக்ஸிஜன் அமேசான் காட்டிலிருந்தே கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்த காட்டுத் தீயை ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்துசெல்லப்பட்டு அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜி7 நாடுகள் அமேசான் காட்டு தீயை அணைக்க ரூ.160 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், பிரேசில் அரசு நிதியுதவி தேவையில்லை என மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்