நண்பனுக்கு வாழ்த்து சொன்ன பிராவோ

  • In Sports
  • September 10, 2019
  • 189 Views
நண்பனுக்கு வாழ்த்து சொன்ன பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு நாள் மற்றும் டி&20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பிராவோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

என்னுடைய நண்பன் பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் சிறப்பான கேப்டனாக செயல்படுவீர்கள். நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்