காஷ்மீர் விவகாரம்.. ஆம்பூரில் வெடிகுண்டு மிரட்டல்

காஷ்மீர் விவகாரம்.. ஆம்பூரில் வெடிகுண்டு மிரட்டல்

ஆம்பூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதன் பின்னர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகிறது.
நேற்று மாலை முகநூல் பக்கத்தில் ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதனுடன் ஒரு போட்டோ ஒன்று வெளியானது.

அதில் குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இது வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது.

இதனையடுத்து ஆம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஆம்பூர் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து ஆம்பூர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்