நடிகர் விஜய் படத்தில் பாலிவுட் நடிகை

  • In Cinema
  • August 7, 2019
  • 265 Views
நடிகர் விஜய் படத்தில் பாலிவுட் நடிகை

சென்னை:

நடிகர் விஜய் நடிக்கும் தனது 64வது படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் யார் யார் பணிபுரிய உள்ளார்கள் என்றும், நடிகர்கள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெறுவதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்