‘தார் கறுப்பு நுரையீரல்’ அதிர்ச்சி வீடியோ

  • In General
  • November 20, 2019
  • 292 Views
‘தார் கறுப்பு நுரையீரல்’ அதிர்ச்சி வீடியோ

பெய்ஜிங்:

சீனாவில் தொடர் சிகரெட் பிடித்தவரின் தார் கறுப்பு நுரையீரலை பிரித்தெடுத்த அதிர்ச்சி தரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் 52 வயதான ஒருவர் இறந்த பிறகு நுரையீரல் தானத்திற்காக பிரித்தெடுத்த போது தார் கறுப்பு நிரத்தில் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த நுரையீரலை டாக்டர்கள் குழு நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விசாரணையில், அவர் நாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பார் எனவும், கடந்த 30 வருடங்களாக புகைப்பிடித்தது தெரியவந்தது. இந்த நுரையீரலை பிரித்தெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ, சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோ புகைப்பிடிப்போரின் ஒரு விழிப்புணர்வாக அமையும் எனவும் டாக்டர்களும், நெட்டீசன்களும் கமெண்ட் செய்துள்ளனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்