தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்- பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்- பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாக புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தப் பதவிக்கு பல தலைவர்கள் போட்டிபோட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

எச் ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், டிகே ராகவன் ஆகியோர் கடுமையாக இந்த பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த முருகன்,

என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயல்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜே பி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்