ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரி..! கிரிக்கெட் பேட்டால் விரட்டிய பா.ஜ., எம்எல்ஏ.,!

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரி..! கிரிக்கெட் பேட்டால் விரட்டிய பா.ஜ., எம்எல்ஏ.,!

இந்தூர்:

மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்து பா.ஜ., எம்எல்ஏ விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்பு பணியில் மாநகராட்சி ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எம்எல்ஏவும், பா.ஜ., மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜய்வர்கியா, அந்த அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கி விரட்டி அடித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்