ஜனாதிபதிக்கு அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து

ஜனாதிபதிக்கு அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி:

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு ம்த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய மக்கள் 130 கோடி பேரின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு முன்மாதிரி என்றும், ஒவ்வொரு வகுப்பினரின் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உங்கள் முயற்சிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர பிரார்த்திக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்