28 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

28 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஒசூர்:

ஓசூர் அருகே அரசுப்பள்ளியில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யாத 28 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே அரசுப்பள்ளியில் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல், பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவிடாத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் தாமதமாய் வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி அவர்களுக்கு புகார் வந்ததையடுத்து, மகேஷ்வரி நேற்று பாகலுரில் அரசு ஆண்கள் பள்ளியை நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது, அப்போது காலை 9.45 மணியிலும் தலைமையாசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்றும், ஆசிரியர்கள் தாமதாக வந்ததாகவும் மேலும் இரண்டு ஆசிரியர்கள் யாரிடமும் விடுமுறை தெரிவிக்காமலே விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது.

தாமதமாக வரும் ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவேடு பயோமெட்ரிக்கில் பதிவு செய்யாததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

பாகலூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் உட்பட பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யாத 28 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரிக்கையில், பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவேடிற்கு மின் இனைப்பு சரியாக வராததால் ஒருவாரமாக பணிசெய்யாமல் இருந்து வருவதை ஓசூர் கல்வி மாவட்ட அலுவலரிடம் தெரிவித்து, பதிவேட்டில் வருகைக்கான நேரத்தை குறிப்பிட்டு கையெழுத்திட்டு வந்ததாக கூறி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்