பில்ரோத் மருத்துவமனையை இடிக்க தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

பில்ரோத் மருத்துவமனையை இடிக்க தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை:

சென்னை நகரின் அமைந்தகரை பகுதியில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2006க்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி, பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், வரைமுறை செய்ய கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், பொதுமக்களுக்கு வழங்கிவரும் தங்கள் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது, மக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும், அப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்படுவார்கள் எனவும் அ;ந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டீக்காராமன் மற்றும் ஆதிகேசவலு முன் வந்தது. அதில், வரைமுறைப்படுத்தக் கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதியின்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனவும், வரைமுறைப்படுத்த கோரி விண்ணப்பித்திருந்தாலும் விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்து, பில்ரோத் மருத்துவமனையின் மனுவை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையை இடிக்க தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பில்ரோத் மருத்துவமனை தாக்கல் செய்த மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது. பில்ரோத் மருத்துவமனையில் அனுமதி மீறி கட்டப்பட்ட 4 தளங்களை இடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்