மூளைக்காய்ச்சல் பாதிப்பு: 100 குழந்தைகள் பலி!

மூளைக்காய்ச்சல் பாதிப்பு: 100 குழந்தைகள் பலி!

பாட்னா:

பீகார் மாநிலத்தில் சர்க்கரை குறைபாட்டால், மூளைக்காய்ச்சலில் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவிக்கையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததே காரணம் எனவும், மக்களிடம் ஹேப்போக்ளிசிமியா என்ற நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

முசாபர்பூர் மருத்துவனைகளில் 290 பேர் ஏ.இ.எஸ். வைரஸ் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்டவைகள் சேர்ந்தது ஏ.இ.எஸ். எனப்படும் பாதிப்பு ஆகும். இது அதிக வெப்பம், மழையின்மை காரணங்களால் சர்க்கரையின் அளவு குழந்தைகளின் உடலில் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்