பிகில் படத்துக்கு முதல் விருது

  • In Cinema
  • August 24, 2019
  • 203 Views
பிகில் படத்துக்கு முதல் விருது

சென்னை:
பிகில் படத்தில் டிசைனராக பணியாற்றி வரும் கோபி பிரசன்னா நடிகர் விஜய்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் படம் பிகில், இதனை அட்லீ இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், யோகி பாபு, விவேக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விஜய் பிறந்த நாள் அன்று பிகில் படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
இந்தப் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வறவேற்பு பெற்றன.

இந்தப் போஸ்டர்களை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா ஆவார்.

படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை அளித்துள்ளார் விஜய்.

அதற்கான புகைப்படங்கள் வெளியாகி மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், கோபி பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் மோதிர புகைப்படத்தை வெளியிட்டு, ‘டிசைனராக எனக்கு கிடைத்த முதல் விருது. நடிகர் விஜய்க்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக பரவி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்