பிகில் டீசர்.. படக்குழு புதிய தகவல்

  • In Cinema
  • October 1, 2019
  • 252 Views
பிகில் டீசர்.. படக்குழு புதிய தகவல்

சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் பிகில். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிலையில், பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தற்போது பிகில் படத்தின் டீசர் என இணையத்தில் போலியான வீடியோ வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போன்ற காட்சிகள் மற்ற படங்களில் இருந்து ஏற்கெனவே எடுக்கப்பட்டவை என்று கூறினர்.

வசனங்களும் அவ்வாறே அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு படக்குழு தெரிவித்த கருத்துக்கள், இணையத்தில் வெளியான வீடியோக்கும் பிகில் டீசருக்கும் சம்பந்தமும் இல்லை.

ரசிகர்கள் எதிர்பார்த்த டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்