ஜூன் 23 முதல் ‘பிக்பாஸ் 3’..!!

  • In Cinema
  • May 30, 2019
  • 289 Views
ஜூன் 23 முதல் ‘பிக்பாஸ் 3’..!!

சென்னை:

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ‘பிக்பாஸ்1’ ‘பிக்பாஸ்2’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ரசிகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே ‘பிக் பாஸ்3’ விரைவில் வெளியாவதாக விஜய் டிவி நிர்வாகம் பிரமோ வெளியிட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த 2 சீசனாக தொகுத்து வழங்கிவரும் கமல் இந்த சீசனையும் தொகுத்து வழங்குவது குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இதனைத்தொடர்ந்து, முதல் பிரமோ வெளியீட்டால், கமல் தொகுத்து வழங்குவது உறுதியானது.

இந்நிலையில், நீண்ட நாள் எதிர்ப்பார்ப்புக்கிடையே தற்போது விஜய் தொலைக்காட்சி, ‘பிக்பாஸ்3’ ஜூன் 23ம் தேதிமுதல் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்