சீரியலில் நடிக்க ரூமுக்கு அழைத்தார்கள்

  • In Cinema
  • August 24, 2019
  • 190 Views
சீரியலில் நடிக்க ரூமுக்கு அழைத்தார்கள்

ஐதராபாத்:
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிக்பாஸ் 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழில் நடப்பது போன்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ரோகினி நோனி வெளியேற்றப்பட்டார்.

அவர் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டேன்.

ஆனால், அப்படி தேடும்போது பல இடங்களில் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். ஆனால், நான் அப்படி செய்தால்தான் நடிக்க வேண்டுமா என்று அந்த வாய்ப்புகளே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இவ்வாறு ரோகினி நோனி தெரிவித்தார். இந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்