லாஸ்லியாவின் மரியாதை குறைவு

  • In Cinema
  • August 13, 2019
  • 197 Views
லாஸ்லியாவின் மரியாதை குறைவு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே லாஸ்லியாவுக்கு ஆர்மி எல்லாம் தொடங்கப்பட்டது.

கடந்த 2வது சீசன் ரித்விகா போன்று எந்த ஒரு பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்து வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக காதல் சர்ச்சையில் சிக்கிகொண்டார் லாஸ்லியா.

அதே போன்று லாஸ்லியாவின் போக்கு சக போட்டியாளர்களுக்கம் சரி, மக்களுக்கும் சரி வெறுப்பேற்றும் விதமாக அமைந்தது.

இடையில் காதல் பிரச்சனையில் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் அவரை அதிகமாக காயப்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டார். நாமினேட்டில் தங்கள் தலைவியின் பலத்தை காட்ட வேண்டும் என லாஸ்லியா ஆர்மியினர் ஓட்டளித்தனர்.

இதனால் எளிதில் வெற்றி பெற்றார் லாஸ்லியா. இதனை கமல் அகம் டிவி வழியாக லாஸ்லியாவிடம் தெரிவித்தார்.

கமல் லாஸ்லியாவை அழைத்தபோது அவர், ஓம் சொல்லுங்க என்று கூறினார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகரிடம் ஒரு மரியாதையாக (சார்) கூட போடாமல் லாஸ்லியா பேசியது மரியாதைக் குறைவாக இருப்பதாக கமல் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே போன்று கடந்த வாரம் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டு விட்டார் என கமல் அறிவித்த போதும் ஒரு நன்றி என்று மட்டும்தான் கூறினார்.

இதனால் கமலிடமே லாஸ்லியா ஆட்டிடியூட் காட்டியதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

தற்போது கமலிடம் மரியாதை குறைவாகப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியாவையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து விரைவில் வெளியேற்றப்படாலம் என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இது இந்த வாரம் எப்படி நிகழ்ச்சி போகிறது என்று பார்த்தபோதுதான் தெரியவரும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்