கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை விருது

  • In Cinema
  • August 9, 2019
  • 234 Views
கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை விருது

புதுடெல்லி:

சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில், ஆண்டுதோறும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் 66வது தேசிய திரைப்பட விருகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கஉள்ளார்.

இதற்கான விருகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. திரைப்படம் எடுக்க உகந்த மாநிலம் உத்தராகண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘பாரம்’ திரைப்படத்திற்கும், சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ’மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் படத்த்திற்கான விருதும், சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய ‘உரி’ படத்திற்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனருக்கான விருது ஹிந்தியில் வெளியன உரி படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த இந்தி படத்திற்கான விருதை ‘அந்தாதுன்’ வென்றுள்ளது.

சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது. சிறந்த நடிகர்களுக்கான விருது ‘அந்தாதுன்’ மற்றும் ‘உரி’ படத்தில் நடித்த விக்கி கவுசல் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது மாகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்