புலிகளை விரட்டியடிக்கும் கரடி; வைரல் வீடியோ

  • In General
  • January 22, 2020
  • 238 Views
புலிகளை விரட்டியடிக்கும் கரடி; வைரல் வீடியோ

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் பூங்கா ஒன்றில் இரு புலிகளை கரடி ஒன்று தனியாக விரட்டியடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ரான்தாம்போர் தேசிய பூங்காவில், புலி ஒன்று முதலில் கரடியிடம் வந்து மிரட்டிப்பார்த்தது. இதற்கு அஞ்சாத கரடி புலியை துறத்தத் தொடங்கியது. சிறிது நேரம் சென்றதும் இன்னொரு புலி சேர்ந்து கரடியை மிரட்டிப் பார்க்கிறது. எதற்கும் அசராத புலிகளை கரடி விரட்டியடிக்கிறது.

இந்த நிகழ்வின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரிமல் நத்வானி என்றவர், ‘எதிர்பாராத கரடி இரு புலிகள் இடையிலான மோதல்களைப் பாருங்கள். கரடியை அச்சுறுத்த முயன்று புலிகள் பயந்து ஓடுகின்றன’ என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்