கரடி தாக்கி பெண் படுகாயம்

கரடி தாக்கி பெண் படுகாயம்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை கரடி தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளது கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மகாராஜகடை, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் வன விலங்குகளான யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் ஏராளமாக உள்ளன.

இவைகள் அவ்வப்பொழுது கிராமப் பகுதிக்குள் வந்து பொது மக்களையும், விவசாயிகளையும் தாக்கி வருகின்றன மேலும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி அருகே உள்ள கோதிகுட்டலபள்ளி கிராமத்திற்கு காட்டுப் பன்றிகளும் கரடிகளும் அடிக்கடி வந்து செல்கின்றன.

கிருஷ்ணகிரி அருகே கோதிகுட்டலபள்ளி கிராமத்தை சேர்ந்த கொரக்கார முனியப்பனின் மனைவி நாகம்மா காலைக்கடன் கழிப்பதற்காக இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோதி குட்டல பள்ளி அருகே உள்ள சாலை ஓரம் சென்றுள்ளார்.

அப்போது புதரில் மறைந்திருந்த கரடி நாகம்மாவை தாக்கி உள்ளது. இவர் கூச்சல் இட்டு கொண்டு ஓடி உள்ளார்.இதனிடையே முகத்தை வேகமாக தாக்கி உள்ளது. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மே லும் தலைமுடியை கடித்து குதறி உள்ளது. இதனால் ரத்தம் தலையில் இருந்து அதிகமாக வெளியேறி உள்ளது.

பலத்த காயம் அடைந்த நாகம்மாவை, அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். மருத்துவமணையில் நாகம்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வருவதை கண்ட கரடி தப்பி ஓடி மகராஜகடை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. வனத்துறையினர் கரடி, காட்டுபன்றி ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்