உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி

ஒசூர்:

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி என்கிற அம்மாவின் சவாலை ஓசூர் பகுதிகளில் நினைவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஓசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

2016 ஆம் ஆண்டு நடைப்பெற வேண்டிய தமிழக உள்ளாட்சி தேர்தல் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது.

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஓசூர் மாநகர மேயர்,மாமன்ற உறுப்பினர்,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உள்ளிட்டவைகள் அடங்கிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்த செயல்வீரர் வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றி திருப்தியடையவில்லை உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100% வெற்றி பெற வேண்டுமென சபதமேற்றிருந்தார், அவர் தற்போது இல்லாவிட்டாலும் ஓசூர் பகுதியில் அதிமுக 100% வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் திமுகவின் பொய்யை மக்கள் கண்டுபிடித்து சரியான முறையில் வாக்களித்துள்ளனர், அதன் வெளிப்பாடாகவே இடைத்தேர்தல் இருக்கும் என்றார்.

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில், மழைநீரை சேமிக்க மேற்க்கொள்ள அரசின் குடிமராமத்து பணிகள், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வைத்த வாக்காளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்