அயோத்தி இடம் இந்துக்களுக்கே

அயோத்தி இடம் இந்துக்களுக்கே

புதுடெல்லி:

அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.

இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  வாசித்தார். அதில், பாபர் மசூதி உரிமை கோரி சன்னி வாரியத்துக்கு எதிராக ஷியா வக்ப் வாரியத்தன் கோரிக்கையை உச்சநீதமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  அயோத்தியில் பாபரின் தளபதியால் மசூதி கட்டப்பட்டதை நீதிமன்றம் ஏற்கிறது.

ஒரு மத நம்பிக்கையில் இன்னொரு மத நம்பிக்கை தலையிட முடியாது. அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.

சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை. மசூதிக்கு கீழ் இருந்தது இஸ்லாமிய கட்டிடம் அல்ல. மசூதிக்கு கீழ் இருந்தது எந்த கோயில் என்பதை தொல்லியல் துறை குறிப்பிட்டு சொல்லவில்லை.

கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதமானது. அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மேல்முறையீடான இதில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் இந்துக்களுக்கே சொந்தம் எனவும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும். மாற்று இடத்தை 3 மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்