உலக கோப்பை ஆஸி. அணியில் மாற்றம்..! அந்த ரிச்சர்ட்சன் வெளியே… இந்த ரிச்சர்ட்சன் உள்ளே

உலக கோப்பை ஆஸி. அணியில் மாற்றம்..! அந்த ரிச்சர்ட்சன் வெளியே… இந்த ரிச்சர்ட்சன் உள்ளே

கேன்பரா:ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன், காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி முதல் துவங்குகிறது. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பல அணிகளின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலக, அதற்கான மாற்று வீரர்களையும் அந்தந்த அணி நிர்வாகம் அறிவித்து வருகிறது.

இந் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளாரான ஜே ரிச்சர்ட்சன் தற்போது காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால் தற்போது உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் வாய்ப்பு உலக கோப்பைக்கு பின்னர் தொடங்க இருக்கும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவும். ரிச்சர்ட்சன், இந்தாண்டு 12 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்