நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்

நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க  ப்ளீஸ்- கதறும் சிறுவன்

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் வசித்துவருகிறார் யார்ரகா பேலஸ். அவரது 9 வயது மகன் குவாடன். இவர் மற்ற குழந்தைகளை போல் அல்லாமல் தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குறைந்தும் காணப்படுகிறான். மாற்று திறனாளிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சமூகத்தில் அவர்கள் கேலியையும் கிண்டலையும் அவ்வபோது சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்டில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் குவாடனை பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்வது அவனது மனதை அதிகம் பாதித்திருக்கிறது. அதனால் அவன் தன் அம்மாவிடம் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். எனக்கு தூக்குகயிறு தாங்க என்று கேட்டு அழுதிருக்கிறான்.அவ்வபோது தனது குறையை கண்டு பிறர் விமர்சிக்கும் போது அழும் மகனை சமாதானம் செய்து வந்திருக்கிறார்.

மகனின் தொடர் குமுறலில் வருத்தமடைந்த யார்ரகா குவாடனின் மனக்குமுறலை வீடியோவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் சிறுவனுக்கு ஆதரவாக டீம் குவாடன் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகிறார்கள்.

அந்த வீடியோடிவில் என் மகனை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல வந்த போது சக மாணவர்கள் கேலி செய்வதை பார்த்தேன். ஒருவர் மனதை புண்படுத்தும் வகையில் கேலி செய்வது அவர்கள மனதளவில் உடைந்து போவதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் எப்போதும் என்னை கொன்று விடுங்கள், நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்லும் குழந்தையை வைத்துகொண்டு பயத்தில் இருக்கிறேன். அந்த வீடியோவில் சிறுவன் குவாடன் என் இதயத்தை நானே குத்தி கொள்ள விரும்புகிறேன். யாராவது என்னை கொலை செய்து விடுங்களேன் என்று கதறுவது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

சிறிய வயதில் குழந்தையின் மனம் இவ்வளவு ரணமாகும் அளவுக்கு சுற்றியிருப்பவர்கள் நடந்துகொள்வது வேதனை தருகிறது என்கிறார்கள் வீடியோவை பார்த்தவர்கள்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்