அவையில் ஒலித்த ‘ஆத்திச்சூடி’

அவையில் ஒலித்த ‘ஆத்திச்சூடி’

புதுடெல்லி:

பட்ஜெட் உரையில் ‘‘பூமியை திருத்தி உண்’’ என ஔவையாரின் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.

2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அப்போது,

அப்போது விவசாயம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘பூமி திருத்தி உண்’’ என்ற ஆத்திச்சூடிய குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் விவசாயத்தை பற்றி 3 வார்த்தைகளில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறி, விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற அதன் விள க்கத்தையும் அவர் அளித்தார்.

‘‘பூமி திருத்தி உண்’’ என்பதின் அர்த்தம்?

நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அ டுத்தவரிடம் கையேந்தாதே என அர்த்தம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்