கடைசி நாளில் குறையாத கூட்டம்

கடைசி நாளில் குறையாத கூட்டம்

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

அத்திவரதரை 31 நாட்கள் சயன கோலத்திலும், 17 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் செய்யப்பட்டது.

அத்திவரதரின் சயன கோல தரிசனம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர்.

கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆகம விதிகளின்படி கடைசி நாளான நாளை (சனிக்கிழமை) அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும்.

இதனால் 48 நாட்களாக இருந்த அத்திவரதர் தரிசனம் 47 நாளாக குறைக்கப்பட்டது.

இறுதி நாளைக்கு முந்தைய தினமான நேற்றும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நேற்று 4 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்