அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஷா:

விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து அஸ்த்ரா ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகனை 70 கி.மீ. தொலைவு வரை விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடியது. 15 கிலோ வெடிமருந்துடன் 5,555 கி.மீ. வேகத்தில் பாயும் திறன் கொண்டது.

இந்நிலையில், ஒடிஷா கடலோரப்பகுதியில், அஸ்த்ரா ஏவுகணையை பொருத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சுகோய் 30எம்கேஐ ஜெட் விமானத்திலிருந்து அஸ்த்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதன செய்யப்பட்டது.

அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், விமானப் படைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்