அசாமில் கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

அசாமில் கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

இந்த ஆண்டு சற்று தாமதமாக தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது.

தற்போது வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாமில் பெய்து வரும் பேய் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அசாமிலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 4,600 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் 11 நதிகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 380-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்