காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி

காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி

டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 5ம் தேதி முதல் பல கட்டுப்பாடுகள் இருந்தது.

இதில் ஜம்மு பகுதியில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. அங்கு ரத்து செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்கிறது.
அங்கு செல்போன், இணையதள சேவைகள் இயங்கவில்லை.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். பின்னர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்