ஷமிக்கு அமெரிக்க விசா கிடைத்தது!

ஷமிக்கு அமெரிக்க விசா கிடைத்தது!

புதுடெல்லி:

வெஸ்ட்இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார். இதனால் அவருக்கு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். முதலில் கிடைக்காத நிலையில், தற்போது பிசிசி தலையீட்டால் விசா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடவுள்ளது இந்தியா. முதல் இரண்டு டி20 போட்டிகள் ஃப்லோரிடாவில் உள்ள லாதெர்ஹில்லில் நடக்கவுள்ளது.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், குடும்ப பிரச்னை காரணமாக வழக்கு இருப்பதால் இந்த சிக்கல் இருந்தது. ஆனால், பிசிசிஐ எம்பசிக்கு கடிதம் எழுதி இதை சரி செய்துள்ளது என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்