மீண்டும் காதல் சர்ச்சையில் அனுபமா

  • In Cinema
  • November 22, 2019
  • 213 Views
மீண்டும் காதல் சர்ச்சையில் அனுபமா

சென்னை:

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் என தகவல் பரவிய நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழில் ‘கொடி’ படத்தில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக தகவல் பரவியதையடுத்து, இதனை அனுபமா உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இந்தி நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியது. இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா பரமேஸ்வரன், காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ அவரவரின் தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர் தலையிடுவது அநாகரிகம் எனவும், என் வாழ்க்கையை தீர்மானிப்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்