ஆன்ட்ரியாவை சீரழித்த அரசியல் வாரிசு

  • In Cinema
  • October 17, 2019
  • 571 Views
ஆன்ட்ரியாவை சீரழித்த அரசியல் வாரிசு

சென்னை:

தன்னை சீரழித்த அரசியல் குடும்ப வாரிசுமான அந்த நடிகர் குறித்து தான் எழுதிய புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக நடிகை ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

பாடகியும் மாடல் அழயுமான நடிகை ஆன்ட்ரியா, ‘ப்ரோக்கன் விங்க்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் சோகமான வரிகள் குறித்து பதிலளித்துள்ள ஆன்ட்ரியா, திருமணமான நடிகரும், அரசியல் குடும்ப வாரிசுமான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, தேவை முடிந்தவுடன் அவர் என்னைவிட்டு விலகி சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், அவரின் இந்த செயலால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், கடுமையான கஷ்டங்களை அனுபவித்து, திலிருந்து மீள தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டாதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த நடிகர் யார் என்பது குறித்தும், அரசியல் குடும்ப வாரிசான அவரின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியுள்ளதாக தற்போது ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருப்பதாகவும், அவ்வாறு வெளியானால் அந்த நடிகர் அரசியல் வாரிசு என்பதால் ஆன்ட்ரியாவுக்கு மிரட்டல்கள் வர வாய்ப்புள்ளதாகவும் செய்தி பரவிவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்