அமித்ஷாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு..!

அமித்ஷாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு..!

புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள 5வது நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்வர்கள் இன்றே அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி சந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்