பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா ?

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா ?

உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்பை மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா குறித்த அறிகுறி தென்பட்டால் தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தன்னை தானே தனிமை படுத்துதல் தொடர்பாக ட்விட்டரில் #SelfIsolation என்ற ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்