முதியோருக்கு அமிதாப் பாராட்டு

  • In Cinema
  • August 13, 2019
  • 205 Views
முதியோருக்கு அமிதாப் பாராட்டு

புதுடெல்லி:

நெல்லை மாவட்டம், கடயம் அருகே அரிவாளுடன் மிரட்டிய கொள்ளையர்களை அடித்து விரட்டிய முதியோர் தம்பதியினருக்கு நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் முதியவர் சண்முகவேலின் கழுத்தில் துணியைக்கொண்டு இறுக்கி, அரிவாளால் மிரட்டியுள்ளனர். அப்போது சுதாரித்துக்கொண்ட சண்முகவேலும், அவரது மனைவி செந்தாமரையும் அடித்து விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் முதியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு டுவிட்டரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்