காதலருடன் ஒன்றாக வசிக்கும் அமலாபால்.!

  • In Cinema
  • July 18, 2019
  • 199 Views
காதலருடன் ஒன்றாக வசிக்கும் அமலாபால்.!

பாண்டிச்சேரி:

காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ள நடிகை அமலாபால் தான் யாரை காதலிக்கிறேன் என்ற விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ளார்.

ஆடையின்றி அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படம் நாளை (19ம் தேதி) வெளியாகிறது. இதனையொட்டி படம் விளம்பரம் கொடுப்பதற்காக அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரிடம் ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில்லை என்று அமலாபால் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அமலாபால் தனது காதலருடன் பாண்டிச்சேரியில் தனியாக வீடு ஒன்றில் குடியேறியிருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அதனை உறுதி படுத்தியுள்ளார். ஆனால் யாருடன் வசிக்கிறேன் என்பதனை சொல்ல மறுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்