அன்னையர் தினத்தை பசுவுடன் கொண்டாடிய அமலாபால்!

  • In Cinema
  • May 12, 2019
  • 236 Views
அன்னையர் தினத்தை பசுவுடன் கொண்டாடிய அமலாபால்!

நடிகை அமலாபால், அன்னையர் தினத்தை பசுவுக்கு புல் கொடுத்து அந்த புகைப்படத்தை டுவிட்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஏராளமான நடிகர், நடிகைகள் தன் குழந்தை பருவத்துடன் கூடிய அவர்களது தாய் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அன்னையர் தினத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், நடிகை அமலா பால், சற்று வித்தியாசமாக நமக்கெல்லாம் பால் கொடுக்கும் பசுவை தாய்போல பாவித்து புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

ஏற்கெனவே மகளிர் தினம், உழைப்பாளர் தினம் ஆகியவற்றிற்கு பெண்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். இந்த முறை சற்று வித்தியாசமாக கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் அம்மா, அவர்களை முன் மாதிரியாக வைத்து எனக்கு கற்றுக்கொடுத்தார். உங்கள் அம்மா உங்களுக்கு செய்த பணிவிடைகளை நினைத்து அவர்களை குழந்தைபோல பாவித்து கவனித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட் பதிவை ஏராளமான ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்