செப்.7 ஆம் தேதி முதல் பேருந்து, ரயிலில் எந்த மாவட்டத்துக்கும் செல்லலாம்: தமிழக அரசு

செப்.7 ஆம் தேதி முதல் பேருந்து, ரயிலில் எந்த மாவட்டத்துக்கும் செல்லலாம்: தமிழக அரசு

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பேருந்து மற்றும் ரயில்களில் மாவட்டங்களுக்கு இடையே செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும், பொதுப்போக்குவரத்து ஏதும் இயக்கப்படாததால் அதனை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாமல், வேலை இழக்கும் சூழலும் நிலவியது. இதன் காரணமாக மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவையை தொடக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதே போல மருத்துவ நிபுணர் குழுவும் போக்குவரத்தை தொடங்க பரிந்துரைத்தது.அதனால் மாவட்டங்களுக்குள்ளான பேருந்து சேவைக்கு கட்டுபாடுகளுடன் அரசு அனுமதி அளித்தது. அதன் படி பேருந்துகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையையும் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அனுமதிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், மக்கள் 7 ஆம் தேதியில் இருந்து பேருந்துகளில் எந்த மாவட்டத்துக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

அதே போல பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் மக்கள் செயல்பட்டால் தான் இதனை தடுக்க முடியும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்தெந்த வகையான ரயில் சேவைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. பணி மற்றும் வியாபாரத்துக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மக்கள் தவிப்பதால் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு சேவைக்கு அரசு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்