மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஜித்

  • In Cinema
  • August 3, 2019
  • 199 Views
மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஜித்

கோவை:

கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேறி மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கிறார்.

சென்னை ரைபிள் கிளப் சார்பாக கலந்துகொண்ட அஜித், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 5 சுற்றுக்களில் 400 பாயின்ட்டுகளுக்கு 314 பாயின்ட்டுகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையடுத்து டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்