‘அன்பே வா’ ரீமேக்..! அஜித் – நயன்தாரா புகைப்படம் வெளியீடு..!!

  • In Cinema
  • May 17, 2019
  • 380 Views
‘அன்பே வா’ ரீமேக்..! அஜித் – நயன்தாரா புகைப்படம் வெளியீடு..!!

சென்னை:

நடிகர் எம்ஜிஆரின் திரைப்படமான ‘அன்பே வா’ ரீமேக்கில் நடிகர் அஜித் – நயன்தாரா புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார், சமீப காலமாக வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விவேகம் என்ற ஸ்பை த்ரில்லர் படம் தோல்வி அடைந்ததால், விசுவாசத்தில் குடும்பத்தினரை கவர்ந்து வெற்றியை கண்டார். அடுத்து பிங்க் என்ற ஹிந்தி பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் ‘அன்பே வா’ என்ற எம்ஜிஆர் படத்தினை ரீமேக் செய்யவுள்ளார் என ஒரு பிரபல வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது. நயன்தாரா தான் இதன் கதாநாயகி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்