நடிகர்களுடன் நெருக்கமா? ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு!

  • In Cinema
  • May 22, 2019
  • 176 Views
நடிகர்களுடன் நெருக்கமா? ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு!

சென்னை:

என்னுடன் சகநடிகர்கள் யாரும் நெருக்கமாக இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், நான் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. தயவுசெய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். அவரைப்பற்றி தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுகிறேன். தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் நானே தெரிவிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்