ஏர்இந்தியா விற்பனை; அறிவிப்பு வெளியீடு

ஏர்இந்தியா விற்பனை; அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி:

அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெறியிட்டுள்ளது.

ஏர்இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டுவரும் தொடர் நஷ்டத்தால் இயங்கிவருகிறது. இதனால் சுமார் ரூ.80,000 கோடி கடனில் மூழ்கியுள்ளது. பல்வேறு முயற்சிகளை எடுத்த நிலையில், தற்போது தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது.

ஏர்இந்தியாவின் இணைப்பு நிறுவனங்களான ஏஐஎக்ஸ்எல்., ஏஐஎஸ்ஏடிஎஸ்., ஆகியவற்றின் 50 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர்இந்தியா பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏர்இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்