விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதே இந்தியாவின் இலக்கு: மோடி

விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதே இந்தியாவின் இலக்கு: மோடி

விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றினால், விவசாயத்தில் தன்னிறைவு பெற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் ஜான்சியில் புதிதாக மத்திய வேளாண் பல்கலையின் நிர்வாக கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. கிராமத்தின் மொத்த பொருளாதார சுயசார்பை உறுதி செய்யப்பட வேண்டும். விவசாயியை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயம் தன்னிறைவு பெறும். விவசாயம், விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால், கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.விவசாயத்தில் சுயசார்பு குறித்து பேசும் போது, அது உணவு தானியங்களில் மட்டும் தன்னிறைவு பெறாமல், கிராமத்தின் முழு பொருளாதாரத்தின் சுயசார்பையும் உள்ளடக்கியது.டுரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில், வறட்சி பாதித்த பகுதிகளில் தண்ணீர் கிடைக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்