கொரோனா எதிரொலி..! மீண்டும் ஊரடங்கு

கொரோனா எதிரொலி..! மீண்டும் ஊரடங்கு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பை சந்தித்து வரும் பிற மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், தற்போது மேலும் ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்