பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்

பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்

புதுடெல்லி:

பாலில் நச்சுத்தன்மை உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது.

தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளது. நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை மிக அதிகமாக இருந்தது தெரிய வந்தது என அமைச்சர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்