2 நடிகைகளுக்கு அதிமுகவில் பதவி.?

2 நடிகைகளுக்கு அதிமுகவில் பதவி.?

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் சினிமாவில் அறிமுகமான, லதா அதிமுக கட்சியில் ஆரம்பகால உறுப்பினராக உள்ளார்.

அவர் நடிகர் ரஜினியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தற்போது வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் செல்லவில்லை.

ஒரு வேளை அதிருப்தியில் உள்ள அவர் ரஜினி கட்சி துவக்கினால் அதில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சும் ஒருபுறம் எழுகிறது.

எனவே அவருக்கு துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், வேலூர் பிரச்சாரத்திற்கு நடிகை விந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கும் தற்போது துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்